search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்திய வீராங்கனைகள்"

    ஆசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற வீராங்கனைகளை இன்று பாராட்டிய பிரதமர் மோடி, மேலும் பதக்கங்களை வெல்ல காத்திருக்கும் பெண்களுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். #AsianGames2018
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் ’மான் கி பாத்’ என்னும் நிகழ்ச்சி வாயிலாக நாட்டு மக்களிடையே வானொலி மூலம் உரையாற்றி வருகிறார்.

    இன்றைய 47-வது ’மான் கி பாத்’ நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தோனேசியாவில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியாவை சேர்ந்த நமது மகள்கள் பெருமளவில் பதக்கங்களை வென்று வருவது சாதகமான அம்சங்களுக்கான அறிகுறியாக தோன்றுகிறது என குறிப்பிட்டார்.

    தொடர்ந்து அவர் பேசியதாவது:-

    இதற்கு முன்னர் நாம் பெரிய அளவில் வெற்றிபெறாத விளையாட்டுகளிலும் நமது வீரர் - வீராங்கனைகள் தற்போது சிறப்பாக விளையாடி நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார்கள்.

    துப்பாக்கி சுடுதல் மற்றும் மல்யுத்தம் போட்டிகளில் நமது நாட்டினர் அபாரமான திறமையை வெளிப்படுத்தியுள்ளனர். அதேவேளையில், முன்னர் எப்போதும் இல்லாத வகையில் பிறபோட்டிகளிலும் இவர்கள் பதக்கங்களை வென்றுள்ளனர்.

    ஊஷூ, துடுப்பு படகு போட்டிகளில் நாம் பெற்றவை சாதாரண பதக்கங்கள் அல்ல. எங்கள் திறமைக்கு வானமே எல்லை என்பதை பறைசாற்றிய இந்திய வீரர்-வீராங்கனைகளின் ஊக்கத்துக்கு இது சிறந்த எடுத்துக்காட்டாகும்.


    இந்தியா எத்தனை பதக்கங்களை வென்றுள்ளது? என்பதை அறிந்து கொள்வதற்காக நாள்தோறும் கோடிக்கணக்கான இந்தியர்கள் ஆர்வத்துடன் நாளிதழ்களிலும், தொலைக்காட்சிகளிலும், சமூகவலத்தளங்களிலும் தேடுகின்றனர்.

    நமது நாட்டை சேர்ந்த மகள்கள் அதிகமான பதக்கங்களை பெற்று தந்துள்ளது, சாதகமான அறிகுறியாகும். மேலும், 15,16 வயதிலும் நாட்டுக்கு பதக்கங்களை பெற்று பெருமை சேர்த்துள்ளனர், இவர்களில் பலர் சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களை சேர்ந்தவர்கள் என்பது இன்னும் சாதகமான அறிகுறியாகும்.

    நாட்டுக்காக பதக்கம் வென்ற அனைத்து வீரர் - வீராங்கனைகளை பாராட்டுகளையும், இதர போட்டிகளில் பங்கேற்கவுள்ளவர்களுக்கு நல்வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறேன்.

    தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு (29-ம் தேதி) எனது வாழ்த்துகளை தெரிவித்துகொள்ளும் அதே வேளையில் ஆரோக்கியத்தை பேணுவதற்கு விளையாட்டுகளில் நமது மக்கள் ஈடுபாடு காட்ட வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.

    ஏனெனில், ஆரோக்கியமான இந்தியாவால்தான் வளமையான இந்தியா உருவாகும். இந்தியா நலமாக இருந்தால் தான் இந்தியாவின் எதிர்காலம் ஒளிமயமாக அமையும்.

    இவ்வாறு அவர் பேசினார். #AsianGames2018 #winningmedals #positivesign
    ×